தன்னிகரில்லா தமிழகத்தில் மிக வேகமாக முன்னேறி வரும் மாவட்டங்களுள் முதன்மை வாய்ந்தது புதுக்கோட்டை மாவட்டம். மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் பரிமளித்து வந்த இந்த மாவட்டம் அந்த பாரம்பரிய பெருமையை இன்றளவும் குறையாமல் நிலைநாட்டி வருகிறது.

மேலும் படிக்க...

  • பொது தகவல்கள்
    • பரப்பளவு: 4.651 ச.கி.மீ.
    • மக்கள் தொகை: 16,18,725 (2011)
    • தொலைபேசி: 04322- 221620
    • கோடை: 26.4 C முதல் 39.1C வரை
    • குளிர்: 20.6 C முதல் 31.3 C வரை
    • சுற்றி பார்க்க: வருட முழுமையும்
    • பேசும் மொழி: தமிழ் & ஆங்கிலம்
  • வான் வழி

    திருச்சிராப்பள்ளி விமான தளத்திலிருந்து 55. கி.மீ

  • தரை வழி

    தமிழகத்தின் எல்லா நகரங்களுடனும் இம்மாவட்டம் இணைக்கப்பட்டுள்ளது.

  • இரயில் வழி

    புதுக்கோட்டையில் இரயில் நிலையம் உள்ளது. மற்ற நகரங்களை இணைக்கும் போக்குவரத்து உள்ளது.

image
image
image
image

பாண்டியர்கள், சோழர்கள், பல்லவர்கள், நாயக்கர்கள், இருங்கோவேளிர், முத்தரையர், தொண்டைமான், விஜயநகர மன்னர்கள் மற்றும் ஹோய்சாலர்கள் போன்ற அரச வம்சங்கள் புதுக்கோட்டை பகுதியை ஆட்சிபுரிந்துள்ளன.

இங்குள்ள பாரம்பரிய கட்டிடங்கள் (எ.கா. மாவட்ட ஆட்சியரக கட்டிடம், நீதிமன்ற வளாக கட்டிடம்) குகை கோவில்கள் (எ.கா. விராலிமலை) முதுமக்கள் தாழி (சித்தனவாசல்) கோவில்கள் மற்றும் நீர்ப்பரப்புகள் அந்த கால பண்பாட்டினையும் வாழ்க்கை முறையையும் தெளிவாக காட்டிடும் காலக் கண்ணாடியாக உள்ளன.

தற்போது மாவட்ட ஆட்சியரக வளாகமாக அமைந்துள்ள அரண்மனை தொண்டைமான் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட திராவிடக்கலையையும் இந்திய - இத்தாலிய கட்டிட முறையும் கலந்த கட்டிடக்கலையால் கட்டப்பட்டதாகும். புதுக்கோட்டை மாவட்டத்தின் பழங்கால குறிப்புகள் சில சங்ககால இலக்கியங்களிலேயே குறிப்பிடப்பட்டுள்ளன.

கொடும்பலூர், நார்த்தமலை, திருமயம் கோட்டை, குடுமியான்மலை, குன்றாண்டார்கோவில், ஆவுடையார்கோவில் மற்றும் சித்தனவாசல் ஆகிய இடங்களில் தொல்லியல் துறை நினைவுச் சின்னங்கள் பழங்கால தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் சின்னங்களாக விளங்குகின்றன. சிற்ப கலைக்கு அடுத்த சிறப்பு கொண்ட மூலிகை மூலம் வரையப்பட்ட குகை ஓவியங்களுக்கு சிறப்பு பெற்ற மாவட்டம் இம்மாவட்டம்.

image
image
image
image