அ/மி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விராலிமலை திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து சுமார் 28கி.மீ. தொலைவிலும் புதுக்கோட்டையிலிருந்து 40கி.மீ. தொலைவிலும் மணப்பாறையிலிருந்து 13கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்வாலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

இந்த கோயிலின் மூலக் கோயிலை அழகிய மணவாளன் எனும் மன்னர் அமைத்தார் என இங்கு உள்ள திருப்பணி கல்வெட்டு பாடல் ஒன்று தெரிவிக்கிறது. இக்கோயிலின் சுற்று சுவர் கொடும்பாளுர் கோவிலை ஒத்து அமையப்பெற்றுள்ளதால் சோழர் கால கோவிலாக இருக்கலாம் என அறியப்படுகிறது. ஆதித்தசோழன் என்பான் இக்கோயிலுக்கு திருப்பணி செய்ததாக இங்குள்ள கல்வெட்டுகள் கூறுகிறது. இவர்களுக்கு பிறகு ஆலயத்தின் மற்ற பிரகாரங்கள் மண்டபங்கள் நாயக்கர்கள் மற்றும் மருங்காபுரியார் மன்னர்களால் மணிமண்டபமும், நவராத்திரி மண்டபமும் கட்டப்பட்டு திருப்பணி செய்யப்பட்டுள்ளது.