ஆவூர் புதுக்கோட்டையிலிருந்து 42கி.மீ. தொலைவிலும் திருச்சியிலிருந்து 20கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. 1747ல் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயம் அவ்வூரில் அமைந்துள்ளது. புனிதர் ஜோசப் பெஸ்கி(வீரமாமுனிவர்) தனது ஆன்மீகப் பணியை சபை அமைத்து இங்கு தான் தொடங்கினார். இங்கு நடைபெறும் ஈஸ்டர் திருவிழா சிறப்புவாய்ந்ததாகும்.