புதுக்கோட்டையிலிருந்து சுமார் 18கிமீ தொலைவில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது திருமயம்கோட்டை. விஜய ரகுநாத சேதுபதி இந்த கோட்டையை 1687-ஆம் ஆண்டு நிர்மாணித்தார். தற்போது நாம் காணும் கோட்டை பகுதிகளை விட இருமடங்கு பெரிதாக பழைய கோட்டை பகுதிகள் அமைந்திருந்தன.

இதன் முக்கிய நுழைவு வாயில் தற்போதுள்ள கோட்டையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தெற்கே அமைந்துள்ளது. இந்த கோட்டையில் தர்பார் மண்டபம், தூண்களுடன் கூடிய பிரகாரம் மற்றும் பல்வேறு கடவுளர்களுக்கான சிலைகள் அமைந்துள்ளன. இக்கோட்டையில் குடைவரை கோவில்களாக அமைந்த சிவபெருமான் மற்றும் விஷ்ணுவின் கோவில்கள் அருகருகே அமைந்துள்ளன. இந்த கோவில்களுக்கு அருகில் மிகப்பெரிய கல்வெட்டு ஒன்றும் அமைந்துள்ளது.

பார்வையிடும் நேரம் :

  • காலை 6மணி முதல் நண்பகல் 12 மணிவரை
  • மாலை 4.30 மணி முதல்; மாலை 8 மணி வரை
  • தொலைபேசி : 04322-221064
  • இந்தியர் (ஒருவருக்கு) ரூ.25/- (நேரில்) ரூ.20/-(ஆன்லைன்)
  • வெளிநாட்டினருக்கு ரூ.300/- (நேரில்) ரூ.250/-(ஆன்லைன்)