வேந்தன்பட்டி புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி வழியாக 40கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரில் மீனாட்சி சொக்கீஸ்வரர் கோவில் என்ற புகழ் பெற்ற சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள நெய் நந்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நந்தியில் தொடர்ந்து நெய்யினால் அபிஷேகம் செய்யப்பட்டாலும் ஈக்கள் மற்றும் எறும்புகள் ஆகியவற்றின் ஆக்கிரமிப்பு இல்லாமல் உள்ளது.