புதுக்கோட்டையிலிருந்து சுமார் 30கிமீ. தொலைவில் திருமயம், மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது காட்டுபாவா பள்ளிவாசல். பக்ருதீன் அவுலியா என்றழைக்கப்படும் காட்டுபாவாவின் சமாதி இங்கு அமைந்துள்ளது. இந்த பள்ளிவாசல் 17ஆம் நூற்றாண்டில் ஆற்காட்டு நவாப்பால் கட்டப்பட்டது. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் கந்தூரி விழா சிறப்பான விழாவாகும். முஸ்லீம்கள் மட்டும் இன்றி பல்வேறு தரப்பட்ட மக்களும் இங்கு அந்நாளில் கூடுவார்கள்.