புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி செல்லும் வழியில் சுமார் 5கி;மீ. தொலைவில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் 1910ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

அரசு அருங்காட்சியகம் வரலாறு, புவியியல், விலங்கியல், தொல்பொருள்கள் மற்றும் சிற்பவியல் ஆகிய பல்வேறுபட்ட துறைகளின் கிடைப்பதற்கு அரிதான பொருள்கள் இங்கு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பித்தளை சிலைகள் கற்சிற்பங்கள் போர்கருவிகள், கத்தி, கோல், கேடயம், பீரங்கிகள், ஆபரணங்கள், ஓவியங்கள், செப்பு தகடுகள், மரசிற்பங்கள், நாணயங்கள், இசை கருவிகள், கல்வெட்டு பிரதிகள் ஆகியவை மிக நேர்த்தியான முறையில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவை பண்டையகால மன்னர்களின் போர்திறன், மக்களின் பண்பாடு ஆகியவை தெரிந்து கொள்ள உதவுகின்றது.

பார்வை நேரம் :

  • காலை 9மணி முதல் மாலை 5 மணிவரை
  • வெள்ளி விடுமுறை நாள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் தவிர
  • நுழைவு கட்டணம் : ரூ.5/-