புதுக்கோட்டை மாநகரில் மகேந்திரவர்ம பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட மலை குகை கோவில் திருக்கோகரணீஸ்வரர் கோவில் ஆகும். இங்குள்ள மூலவர் கோகரணீஸ்வரர், தேவியர் பிரகதாம்பாள்.
தொண்டைமான் வம்சத்தினர் ஆட்சியின் போது இங்கு சித்திரை பெருவிழா, ஆடிபூரம் மற்றும் நவராத்திரி விழா ஆகியவை மிகவும் சிறப்பாக நடைபெறும். நாடகம், நாட்டியம் மற்றும் இசை ஆகியவை இங்கு சிறப்புற்று விளங்கியது. பிற்காலத்தில் பாண்டியர் சோழர்கள் மற்றும் தொண்டைமான் அரச வம்சங்களும் சில பகுதிகளை கட்டமைத்து பெரிய கோவிலாக பரிமளிக்க செய்துள்ளனர்.