புதுக்கோட்டையிலிருந்து 20கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. பழங்கால வரலாறு மற்றும் கலை ஆகியவற்றை தெளிவாக அறிந்து கொள்ள உதவும் குடைவரை கோயில்கள் இங்குள்ளன.

ஒரு மலை குன்றின் மீது சிக்கநாதீஸ்வரன் மூலவராக கொண்ட சிவபெருமான்; கோவில் ஒன்று அமைந்துள்ளது. அதனை சுற்றி நான்கு சிறு கோவில்களும், அவற்றில் சிறுசிறு சிற்பங்களும் காண்பவர் கண்ணுக்கு விருந்தாக அமைகிறது. இங்கு அமைந்துள்ள குகை கோவிலின் முகப்பில் இசை கல்வெட்டு ஒன்றும் 120-க்கு மேற்பட்ட கல்வெட்டுகளும் உள்ளது. தமிழக அரசிற்கு சொந்தமான விவசாய கல்லூரி ஒன்று இங்கு அமைந்துள்ளது.

  • தொலைபேசி : 04322 - 221084