ஆவுடையார்கோவில் புதுக்கோட்டையிலிருந்து சுமார் 40கி.மீ தொலைவில் உள்ளது. ஆத்மநாதசுவாமி கோவில்தான் இங்கு அமைந்துள்ள முக்கிய கோவில். இங்கு முழு உருவசிலைகள் பல பார்ப்பவர்களை பரவசமூட்டும் வகையில் அமைந்துள்ளது. கருங்கற்களால் ஆன கூரை வேலைப்பாடுகள் இங்கு மிக நேர்த்தியாக அமையப்பெற்றுள்ளது. சிதம்பரம் நடராஜா கோவிலில் பொன்னால் கூறை அமைக்கப்பட்டுள்ளது போல ஆத்மநாதசுவாமி திருக்கோவில் செம்பினால் கூறை அமைக்கப்பட்டுள்ளது.

  • தொலைபேசி : 04371-233301