குன்றாண்டார் கோவில் கல்வெட்டுகளில் திருக்குன்றக்குடி என்றழைக்கப்படுகிறது. இங்கு நந்திவர்மபல்லவன் காலத்து (710-775பும்) குடை வரை கோவில் அமைந்துள்ளது. மலையின் மேல் சிறிய முருகன் கோவில் ஒன்றும் அமைந்துள்ளது. இங்குள்ள கல்யாண மண்டபம் தேர் போன்ற அமைப்பில் குதிரைகள் பூட்டிய வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.