புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல் செல்லும் சாலையில் இருந்து சுமார் 15.கி.மீ தொலைவில் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது சித்தன்னவாசல். இந்திய ஓவியக்கலை வரலாற்றில் அஜந்தா குகை ஓவியத்திற்கு அடுத்ததாக புகழ்பெற்ற ஓவியங்கள் சித்தன்னவாசலில் உள்ளது. இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த பிராமி தமிழ் எழுத்துக்கள் இங்குள்ள சமணப் படுக்கைகளில் காணப்படுகிறது.
இங்குள்ள குகைகளின் மேற்கு சரிவில் மூலிகைகளினால் வரையப்பட்ட ஓவியங்கள் காணப்படுகிறது. தமிழர்களின் கலை பண்பாட்டினை பறைசாற்றும் உயிரோட்டமுள்ள ஓவியங்களாக இவை திகழ்கின்றன. ஓர் அழகிய குளத்தில் தாமரை மலர், அல்லி மலர்கள், மீன்கள் நீந்துவது போலவும், எருமைகள் நிற்பது போலவும், யானைகள் தண்ணீர் குடிப்பது போலவும், கீரிப்பிள்னை விளையாடுவது போலவும் ஓவியங்கள் தத்ருபமாக அமையப்பெற்றுள்ளது. சித்தன்னவாசல் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தியதாக கருதப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளின் பொழுது போக்கிற்காக இங்கு சிறுவர் பூங்காவும், இசை நீருற்றுகளும் சுற்றுலாத்துறை சார்பாக நிறுவப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து தங்கி செல்வதற்கு பயணியர் மாளிகை ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. முத்தமிழ் பூங்காவில் புதுக்கோட்டை மாவட்டம் சார்ந்த கலை மற்றும் இலக்கியச் செய்திகள் அடங்கிய சிறு சிறு கற்சிலைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள குகை ஓவியங்கள் மற்றும் சமணர்ப்படுக்கைகள் ஆகியவற்றினை காண நுழைவு கட்டணமாக
சித்தன்னவாசல் சுற்றுலா வளர்ச்சி சங்கத்தின் சார்பாக படகு இல்லம் ஒன்றும் இங்கு செயல்படுகிறது.
மலையழகும் பூங்காக்களின் பொலிவும், சிற்பக்கலை மற்றும் ஓவியக்கலைகளின் பிரமிப்பும் பார்ப்பவர்களை பரவச மூட்டும் வகையில் இந்த சுற்றுலா தலம் அமைந்துள்ளது.