கொடும்பாளூர் புதுக்கோட்டையிலிருந்து 35கி.மீ.தூரத்திலும் திருச்சியிலிருந்து 40கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடம் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூவர் கோவில் மற்றும் முச்சுகுண்டேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்கள் சோழர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. திராவிடக் கலைக்கு முன்னோடியாகவும், சோழர் கால கட்டிடக்கலைக்கு முதன்மையானதாகவும் இது விளங்குகிறது.