புதுக்கோட்டையிலிருந்து 70கி.மீ தொலைவிலும் ஆவுடையார் கோவிலிலிருந்து 30கி.மீ தொலைவிலும் திருப்புனவாசல் அமைந்துள்ளது. விருத்தபுரீஸ்வரர் என்ற மூலவரைக் கொண்ட சிவபெருமான் கோவில் இங்கு அமைந்துள்ளது. இங்குள்ள லிங்கம் மிகவும் பெரியது. திருநாவுக்கரசர், சுந்தர், திருஞானசம்பந்தர் ஆகிய சைவ துறவிகளால் பாடல் பெற்ற தலம். வைகாசி மாதத்தில் இங்கு நடைபெறும் தேர் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.