புதுக்கோட்டை திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டையிலிருந்து 6கி.மீ. தொலைவில் உள்ளது. திருவேங்கைவாசல். 11ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட வியாகபுரிஸ்வரர் உடனுறை பிரகதாம்பாள் இங்கு முக்கிய மூலவர்கள் ஆவர்.
சோழர்களுக்கு பின் வந்த பாண்டியர்களும் இந்த கோயிலை புனரமைப்பு செய்தனர். இங்குள்ள கல்வெட்டுகள் அந்த கால சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலையை படம் பிடித்து காட்டுவன போன்று அமைந்துள்ளது. ஞான தட்சிணாமூர்த்தி மற்றும் யோக தட்சணாமூர்த்தி ஆகிய தட்சணாமூர்த்தி சிலைகள் இக்கோயிலில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.